இந்திய தடகள கூட்டமைப்பின் துணைத் தலைவர் அஞ்சு பாபி ஜார்ஜ். இவர் 2003ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் நீளம் தாண்டுதல் பிரிவில் வெண்கலம் வென்றவர். உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கம் வென்ற ஒரே வீராங்கனையும் இவர் தான்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், '' இந்திய விளையாட்டு வீரர்களுக்கு வெற்றிகளை எப்படி அனைவரையும் கவரும் வகையில் கொண்டாட வேண்டும் என்பதை கற்றுத்தர வேண்டும். ஏனென்றால் பார்வையாளர்கள் விரும்பும் நாயகர்களாக இருக்க வேண்டும்.
பார்வையாளர்களை எப்படி தொடர்ந்து திரும்பி பார்க்க வைக்க நாம் கற்க வேண்டும். அமெரிக்காவில் உள்ள விளையாட்டு வீரர்கள், இந்த யுக்தியை தான் பயன்படுத்துகிறார்கள். நமது வேகம், நமது ஜம்ப், நமது விளையாட்டு ஆகியவற்றை ரசிக்க வைப்ப வேண்டும். பார்வையாளர்கள் இல்லையென்றால், நிச்சயம் நன்றாக இருக்காது.