தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இந்த ஆண்டுக்கான ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், கலப்பு இரட்டையர் ரீகர்வ் பிரிவுக்கான வெண்கலப் பதக்க போட்டி இன்று நடைபெற்றது.
இதில், பங்கேற்ற இந்தியாவின் தீபிகா குமாரி- அடானு தாஸ் ஜோடி சீனாவின் யிசாய் ஹெங் - சவுசான் வெய் (Yichai Zheng - Shaoxuan Wei) இணையை 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றது.
வெண்கலம் வென்ற இந்திய ஜோடி இதேபோல் நடைபெற்ற கலப்பு இரட்டையர் காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா - ஜோதி சுரேக்கா 159-154 என்ற கணக்கில் தென் கொரிய இணையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. நாளை மறுநாள் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்திய ஜோடி, சீனதைபை இணையுடன் தங்கப் பதக்கத்துக்காக மோதவுள்ளது.
அதேசமயம், அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றுக்கான போட்டியிலும் இந்திய வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.