இந்தியாவில் ஐபிஎல் தொடருக்குப் பின் ப்ரோ கபடி லீக் போட்டிகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது வணிக ரீதியாகவும் கபடி போட்டிகள் பல்வேறு உயரங்களை எட்டிவருகிறது. இருப்பினும், ஆசியப் போட்டிகளில் முக்கிய விளையாட்டாக பார்க்கப்படும் கபடியை ஒலிம்பிக்கில் சேர்க்க முடியவில்லை.
இது குறித்து பேசிய மத்திய விளையாட்டுத் துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ”இந்தியாவின் முக்கிய விளையாட்டான கபடிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு பழமையான விளையாட்டு எவ்வாறு வளர வேண்டும் என்பதற்குக் கபடியே சிறந்த எடுத்துக்காட்டு. இந்தியாவின் மிக முக்கிய விளையாட்டாக இருக்கும் கபடி விளையாட்டினை, நிச்சயம் பாரிஸில் நடைபெறும் 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் சேர்க்க முழுமையான முயற்சி மேற்கொள்ளப்படும்” என்றார்.