அகமதாபாத்:குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
முதல் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்தது. இதேபோல இரண்டாவது போட்டியிலும் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இன்று(பிப்.11) கடைசிப் போட்டியான மூன்றாவது ஒருநாள் போட்டி தொடங்கியது. இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி அனைத்து விக்கெட் இழப்பிற்கு 265 ரன்களை எடுத்துள்ளது.
அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 80 ரன்களை எடுத்து அசத்தினார். இதையடுத்து ரிஷப் பந்த் தனது பொறுப்பான ஆட்டம் மூலம் 56 ரன்களை எடுத்தார். இந்த போட்டியில் வென்று வொய்ட் வாஷ் செய்யுமா இந்தியா என்னும் எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.
இதையும் படிங்க:IND VS WI: வொய்ட் வாஷ் செய்யுமா இந்தியா? - தவான் இன்; ராகுல் அவுட்