தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

விளையாட்டில் இந்தியா முக்கிய சக்தியாக மாறும்: ரிஜிஜு - UTT

டெல்லி:  உலகளாவிய விளையாட்டில் இந்தியா முக்கிய சக்தியாக மாறும் என விளையாட்டுத் துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு பேசியுள்ளார்.

ரிஜிஜு

By

Published : Jul 26, 2019, 11:52 AM IST

மூன்றாவது ஆண்டாக நடைபெறும் டேபிள் டென்னிஸ் தொடரின் தொடக்க விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கலந்துகொண்டு இதனைத் தொடங்கி வைத்தார். அப்போது பேசுகையில், சமீப காலமாக சர்வதேச டேபிள் டென்னிஸ் தொடர்களில் இந்திய வீரர்கள் சாதித்து வருகின்றனர். டேபிள் டென்னிஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து டேபிள் டென்னிஸ் விளையாட்டை இந்தியாவில் பிரபலமடைய செய்துள்ளன.

டேபிள் டென்னிஸ் தொடக்க விழா

ஒலிம்பிக் போட்டிகளில் மிக விரைவில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இந்திய வீரர்கள் பதக்கம் வெல்வார்கள். அதற்காக இந்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அனைத்து உதவிகளையும் செய்யும். உலகளாவிய விளையாட்டில் இந்தியா முக்கிய சக்தியாக மாறும் என்றார்.

இந்தத் தொடரின் முதல் போட்டியில் டபாங்க் டெல்லி அணியை எதிர்த்து புனெரி பால்டன்ஸ் அணி விளையாடியது. அதில் புனேரி பால்டன் அணி வெற்றிபெற்றது.

ABOUT THE AUTHOR

...view details