தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சீனாவால் பறிபோனது இந்திய அணியின் வெள்ளிப்பதக்கம்! - ஆசிய தடகள சாம்பியன்ஷிப்

தோகா: ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரின் 4×400 ஆடவர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய அணி வென்ற வெள்ளிப் பதக்கத்திற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்ததால் இந்திய ஆடவர் அணியின் வெள்ளிப்பதக்கம் திரும்ப பெறப்பட்டது.

டூட்டி சந்த்

By

Published : Apr 26, 2019, 12:16 PM IST

Updated : Apr 26, 2019, 12:23 PM IST

2019ஆம் ஆண்டுக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி நாளான நேற்று, ஆண்களுக்கான 4×400 தொடர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியா சார்பாக தமிழ்நாடு வீரர் ஆரோக்ய ராஜ், குன்ஹு, ஜீவன், அனஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். பந்தய தூரத்தை 3 நிமிடங்கள் 3.28 வினாடிகளில் கடந்து வெள்ளிப்பதக்கத்தை வென்று அசத்தினர்.


ஆனால் இந்தியாவின் வெற்றிக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, பதக்கங்கள் திரும்பப்பெறப்பட்டது. பின்னர் இந்தியாவின் வெள்ளிப்பதக்கம் சீனாவுக்கு கொடுக்கப்பட்டது. வெண்கலம் பதக்கத்தை கத்தார் அணி வென்றது.

இந்தியாவிடமிருந்து வெள்ளிப்பதக்கம் பறிக்கப்பட்டது குறித்து, இதுவரை உரிய தரப்பிலிருந்து எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. இது இந்திய ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது.

நேற்று நடைபெற்ற வேறு சில போட்டிகளின் முடிவுகள்

பெண்களுக்கான 200 மீ ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பாக டூட்டி சந்த் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார்.

டூட்டி சந்த்

பந்தயம் தொடங்கிய நிமிடங்களில் மின்னலென சீறிப் பாய்ந்த வீராங்கனைகள் மத்தியில், டூட்டி சந்த் தொடக்கத்தில் சற்று பின் தங்கினார். பின்னர் சுதாரித்துக் கொண்டு ஆக்ரோஷமாக ஓடியவர், பந்தய தூரத்தை 23.24 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.

தங்கப்பதக்கத்தை பக்ரைன் வீராங்கனை சால்வாவும், கஜகஸ்தான் வீராங்கனை ஓல்கா வெள்ளிப்பதக்கத்தையும் வென்றனர்.

அஜய் குமார்,

பின்னர் நடைபெற்ற ஆண்களுக்கான 1500 மீ ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் அஜய் குமார், பந்தய தூரத்தை 3 நிமிடங்கள் 43.18 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தார்.

Last Updated : Apr 26, 2019, 12:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details