தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

Asian Games squash : இந்திய அணி தங்கம்! மலேசியாவை வீழ்த்தி சாம்பியன்! - Asian Games squash india Mixed Team Gold

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் இந்திய கலப்பு இரட்டையர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Squash
Squash

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2023, 12:24 PM IST

ஹாங்சோ :ஆசிய விளையாட்டு தொடரின் ஸ்குவாஷ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி தங்கம் வென்றது. 19வது ஆசிய விளையாட்டு தொடர் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது.

இதில், இன்று (அக். 5) ஸ்குவாஷ் விளையாட்டில் கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் தீபிகா பல்லிகல் மற்றும் ஹரிந்தர் சந்து தங்கம் வென்று சாதனை படைத்தனர். இறுதி போட்டியில் இந்திய ஜோடி 2-க்கு 0 என்ற செட் கணக்கில் மலேசிய இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

ABOUT THE AUTHOR

...view details