13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நேபாள் தலைநகர் காத்மண்டு, போக்ரஹாவில் நடைபெற்றுவருகின்றன. இதில், பளூதூக்குதல் பிரிவுக்கான போட்டிகள் நேற்று நடைபெற்றன. மகளிர் 45 கிஎலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஜிலி தாலாபேரா ஸ்னாட்ச் (66 கி.கி) க்ளின் அண்ட் ஜெர்க் முறை (85 கி.கி) என மொத்தம் 151 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். அவருக்கு அடுத்தப்படியாக இலங்கை வீராங்கனை திவ்சேகரா சமராகூன் ஸ்ரீமாலி 139 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கமும், நேபாளத்தைச் சேர்ந்த சங்கீதா ராய் 127 கிலோ எடையை தூக்கி வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
இதேபோல, மகளிர் 49 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை சினேகா சொரன் ஸ்னாட்ச் (68 கி.கி) க்ளின் அண்ட் ஜெர்க் (89 கி.கி) என 157 கிலோ எடையை தூக்கி தங்கம் வென்றார். இதில், வெள்ளிப் பதக்கம் 155 எடையை தூக்கிய இலங்கையின் கோமஸ் ஹன்சானிக்கும், வெண்கலப் பதக்கம் 130 கிலோ எடை தூக்கிய வங்கதேச வீராங்கனை ஷபிரா மோலாவிற்கும் கிடைத்தது.