நேபாளத் தலைநகர் காத்மண்டு, போக்ரஹாவில் நடைபெற்றுவரும் 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நிறைவு பெற இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. இதனிடையே இந்தத் தொடரின் முதல் நாளில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் இந்திய விளையாட்டு வீரர்கள், பதக்கங்களைக் குவித்து அசத்தியுள்ளனர்.
இதில் பளுத்தூக்குதல் பிரிவில் இந்திய அணி சார்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த அனுராதா பவுனுராஜ் பங்கேற்றார். இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட அவர், மகளிர் 200 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். இதன் மூலம் தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் பளுத்தூக்குதல் பிரிவில் இந்தியா இதுவரை ஒன்பது தங்கம், ஒரு வெள்ளி என 10 பதக்கங்களைப் பெற்று அசத்தியுள்ளது.