தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான 13ஆவது விளையாட்டுத் தொடர் தற்போது நேபாள் தலைநகர் காத்மண்டு, போக்ரா ஆகிய நகரங்களில் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிஸ்தான், வங்கதேசம், பூடான் மற்றும் மாலத்தீவு என எட்டு நாடுகள் பங்கேற்றுள்ளன.
இந்நிலையில் தெற்காசிய விளையாட்டு போட்டியின் ஒன்பதாம் நாளில் இந்திய அணி 27 தங்கப் பதக்கங்களையும், 12 வெள்ளிப் பதக்கங்களையும், மூன்று வெண்கலப் பதங்களையும் கைப்பற்றி நேற்று மட்டும் 42 பதக்கங்களை பெற்றுள்ளது.
இதன் மூலம் 13ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய அணி 159 தங்கம், 91 வெள்ளி, 44 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 294 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியளில் முதலிடத்தில் நீடித்துவருகிறது. இத்தொடரில் இந்திய அணி 300 பதக்கங்களை பெறுவதற்கு இன்னும் ஆறு பதக்கம் மட்டுமே தேவை உள்ளது. எனவே, இன்று நடைபெறும் போட்டிகளில் வெற்றிபெற்று அந்த இலக்கை இந்திய அணி எளிதாக எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:மீண்டும் அணியில் இடம்பெறும் கேரி கிர்ஸ்டன் - உற்சாகத்தில் ரசிகர்கள்!