ஹாங்சோ :ஆசிய விளையாட்டு போட்டியின் 8வது நாளில் இந்தியா ஒரு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்களை அறுவடை செய்தது.
19வது ஆசிய விளையாட்டு தொடர் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான டிராப் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்றது. இந்திய ஆடவர் அணியின் கியான் செனை, சோராவர் சிங், பிரிதிவிராஜ் தொண்டைமான் ஆகியோர் தங்கம் வென்றனர்.
அதே விளையாட்டில் மகளிர் பிரிவில் நடந்த இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி வெள்ளி பதக்கம் வென்றது. இந்திய வீராங்கனைகள் மணீஷா கீர், பிரதி ராஜக், ராஜேஸ்வரி குமாரி ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
அதேபோல் மகளிருக்கான கோல்ப் விளையாட்டில் இந்திய வீராங்கனை அதிதி அசோக் வெள்ளிப் பதக்கம் வென்றார். விறுவிறுப்பாக நடந்த இறுதிப் போட்டியி வெள்ளிப் பதக்கம் வென்ற அதிதி அசோக் ஆசிய போட்டியின் கோல்ப் விளையாட்டில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்றார்.
இதையும் படிங்க :ஆசிய விளையாட்டு போட்டி; ஸ்குவாஷ் ஆடவர் பிரிவில் தங்கம் வென்ற இந்திய அணி!