பெல்ஜியத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஹாக்கி அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், முதல் போட்டி ஆண்ட்வெர்ப் நகரில் நேற்று நடைபெற்றது. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கத் தவறின.
வெற்றியுடன் தொடரை தொடங்கிய இந்தியா! - Belgium v India Hockey
பெல்ஜியம் அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து, நடைபெற்ற இரண்டாம் பாதியில் இந்திய அணி கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இதன் பலனாக, 39ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் மந்தீப் சிங் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத்தந்தார். இதைத் தொடர்ந்து, ஆட்டத்தின் 54ஆவது நிமிடத்தில் மற்றொரு இந்திய வீரர் அக்ஷ்தீப் சிங் தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்து மிரட்டினார். இதனால், இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி அக்டோபர் 1ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.