தாய்லாந்து:தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டிகள் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்றது. இதில் ஆடவர் ஆண்கள் இறுதிப்போட்டியில் இந்திய அணி 14 முறை சாம்பியனான இந்தோனேஷியாவை எதிர்கொண்டது.
அசத்திய லக்ஷயா சென்:முதலாவதாக ஆடவர் ஒற்றையரில் இந்தியாவின் லக்ஷயா சென் - இந்தோனேஷியாவின் ஆண்டனி சினிசுகாவை எதிர்கொண்டார். முதல் செட்டை 8க்கு 21 என்ற கணக்கில் இழந்த போதிலும் , பின்னர் சிறப்பாக ஆடி அடுத்த இரண்டு செட்களை 21க்கு 17 , 21க்கு 16 என்ற கணக்கில் கைப்பற்றி லக்ஷயா சென் வெற்றி பெற்றார். இதனால் இந்தியா 1க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
மாஸ் காட்டிய சாத்விக்-சிராக் :இரண்டாவதாக நடைபெற்ற ஆடவர் இரட்டையரில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிசெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி, அஷான் மற்றும் கெவின் ஜோடியை 18க்கு 21 , 23க்கு 21, 21க்கு 19 என்ற கணக்கில் போராடி வீழ்த்தியது. சாத்விக் சாய்ராஜ் ரங்கிசெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடியின் வெற்றியால் இந்தியா 2க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.