உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் ரஷ்யாவில் எகடரின்பர்க் நகரில் நடைபெற்றுவருகிறது. இதில், 52 கிலோ எடைப் பிரிவுக்கான போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் அமித் பங்கல், துருக்கி குத்துச்சண்டை வீரர் படுஹான் சிட்ஃப்சி (Batuhan Citfci) உடன் மோதினார். ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய பங்கல் 5-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
என் வெற்றியை பிரதமர் மோடிக்கு அர்ப்பணிக்கிறேன் - குத்துச்சண்டை வீரர்
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தனது வெற்றியை பிரமதர் மோடிக்கு அர்ப்பணிப்பதாக குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல் தெரிவித்துள்ளார்.
amit-panghal
இதைத்தொடர்ந்து, காலிறுதிப் போட்டியில் அவர் வெற்றிபெறும்பட்சத்தில் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்வார். பிரதமர் மோடி இன்று 69ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, தனது இந்த வெற்றியை அவருக்கு அர்ப்பணிப்பதாக அமித் பங்கல் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், இந்தத் தொடரில் இந்திய வீரரான கவிந்தர் சிங் பிஷ்ட் (57 கிலோ), மனிஷ் கவுசிக் (63 கிலோ), சஞ்ஜித் (91 கிலோ) ஆகியோரும் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.