தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்தியன் பாக்ஸிங் லீக்: ஒடிசாவை புரட்டிப்போட்ட நார்த் ஈஸ்ட் - நார்த் ஈஸ்ட் ரைனோஸ் அணி

இந்தியன் பாக்ஸிங் லீக் தொடரில் நார்த் ஈஸ்ட் ரைனோஸ் அணி, ஒடிசா வாரியர்ஸ் அணியை வீழ்த்தி நான்காவது இடத்துக்கு முன்னேறியது.

IBL, இந்தியன் பாக்ஸிங் லீக்
IBL, இந்தியன் பாக்ஸிங் லீக்

By

Published : Dec 13, 2019, 2:47 PM IST

கிரிக்கெட், கால்பந்து, கபடி, பேட்மிண்டன் வரிசையில் இந்தியாவில் குத்துச்சண்டையையும் பிரபலப்படுத்தும் நோக்கில் இந்தியன் பாக்ஸிங் லீக் என்றத் தொடர் நடத்தப்படுகிறது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரின் மூன்றாவது சீசன் கடந்த டிசம்பர் 2ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர்.

இதில் டெல்லி இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற போட்டியில் நார்த் ஈஸ்ட் ரைனோஸ் அணி, ஒடிசா வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் மகளிர் 60 கிலோ எடைப்பிரிவில் சந்தியா ராணியை 4-1 என்ற புள்ளிக் கணக்கில் வில்லா பஸ்முவாத்திரயை வீழ்த்தினார்.

பின்னர் ஆடவர் 69 கிலோ எடைப்பிரிவில் ஜகாங்கிர் ராக்மோனோவை வீழ்த்திய நார்த் ஈஸ்ட் வீரர் மந்தீப் ஜாங்ரா அமித் பங்கால், மேரி கோம், சிம்ரன்ஜித் கவுர் ஆகியோருக்கு அடுத்தபடியாக தொடக்கத்திலேயே மூன்று வெற்றிகளை குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். பின்னர் மகளிர் 51 கிலோ எடைப்பிரிவில் ஒடிசாவின் ஷிக்ஷா நார்த் ஈஸ்ட் வீராங்கனை மீனாக்ஷி ஆகியோருக்கு இடையே நடைபெற்ற கடுமையான போட்டியில் ஷிக்ஷா வெற்றி பெற்றார்.

ஆடவர் 75 கிலோ பிரிவில் பிரான்சிஸ்கோ வெரோன் (நார்த் ஈஸ்ட்) பிரோமோத் குமார் (ஒடிசா) இடையேயான போட்டி டிராவில் முடிவடைந்தது. இதனால் நார்த் ஈஸ்ட் ரைனோஸ் அணி 4-3 என்ற புள்ளிகள் கணக்கில் ஒடிசா வாரியர்ஸை வீழ்த்தி நான்காவது இடத்துக்கு முன்னேறியது.

ABOUT THE AUTHOR

...view details