2019ஆம் ஆண்டுக்கான இந்தியன் பாக்ஸிங் லீக் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. அதன் நேற்றையப் போட்டியில் வலிமையான பஞ்சாப் பாந்தர்ஸ் அணியை எதிர்த்து பெங்களூரு ப்ராலர்ஸ் அணி விளையாடியது.
லீக் சுற்றுகளில் பஞ்சாப் அணிக்கு இது கடைசி போட்டி என்பதால், அந்த அணியின் முக்கிய வீரர்களான மேரி கோம், உஸ்பெகிஸ்தான் வீரர் அப்துல் மாலிக், மனோஜ் குமார் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு, நான்கு புதிய வீரர்களைக் களமிறக்கியது.
இதில் தொடக்கப் போட்டியில் களமிறங்கிய 51 கிலோ எடைப் பிரிவில் அனாமிகா களமிறங்கி தர்ஷனாவை வீழ்த்த, அதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் ப்ரசாத் பெங்களூரு அணியின் ஆஷிஷை வீழ்த்தி 1-1 என புள்ளிகளை ஈடுசெய்தார்.