பானிபட்: 2024 ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில், ஈட்டி ஏறிதலில் உலக சாம்பியன், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா, பாரீஸ் ஒலிம்பிக் 2024 குறித்து பேசியுள்ளார்.
"பாரீஸ் ஒலிம்பிக் தொடருக்கான பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளேன். பதக்கம் வெல்ல அனைத்து விதத்திலும் முயற்சி செய்வேன். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வாய்ப்பு கிடைக்கும் என்பதால் எனது சிறந்த ஆட்டத்தை ஒலிம்பிக் போட்டியில் வெளிப்படுத்துவேன். அதற்காக வெளிநாடு சென்று பயிற்சி மேற்கொள்கிறேன்.
நாட்டிற்காக பதக்கத்தை வெல்ல 100 சதவிதம் களத்தில் எனது பங்களிப்பை கொடுப்பேன்" என தெரிவித்துள்ளார். நீரஜ் சோப்ரா கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் அவர் உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.