உலக அளவில் பிரபலமான ஹுலா ஹூப்பர் எனப்படும் சாதனை வளையத்தில் விளையாட்டு மற்றும் நடனம், உடற்பயிற்சி என பல வகையில் போட்டிகள் நடத்தப்படுகிறது.
முறையான பயிற்சியின் மூலம் உடல் அசைவுகளுக்கு ஏற்ப சாகச வளையங்களை சுழலட்டுவதின் மூலம் மூளையை ஒருமுகப்படுத்தி உடலை கட்டுகோப்பாக வைப்பதிலும் இந்த சாகச வளைய விளையாட்டு உதவுகிறது. பெரும்பாலும் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான இந்த விளையாட்டு தற்பொழுது சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பிரபலமடைந்து வருகிறது.
இந்த விளையாட்டில் சென்னை, அண்ணாநகரை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் முறையாக கடந்த ஒரு வருட காலமாக பயிற்சி பெற்று உலக சாதனை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று சாய் பாலாஜி என்ற 7 வயது சிறுவன் தனது முழங்கால் முட்டி பகுதியில் சாகச வளையத்தில் 30 நிமிடங்கள் இடைவிடாது சுற்றியும், சாய்சம்யுக்தா என்ற 11 வயது சிறுமி முழுங்கை மற்றும் இடுப்பு பகுதி என ஒரே நேரத்தில் இரண்டு சாகச வளையத்தை மாட்டி 1 மணி நேரம் சுழற்று சாதனை படைத்தனர்.
ஹுலா ஹூப்பர் விளையாட்டில் அசத்தும் மாணவர்கள் இச்சாதனையை யுனிவர்சல் அச்சுவர்ஸ் புக் ஆப் ரெக்கார்டு மற்றும் பியூட்சர்ஸ் கலாம்ஸ் புக் ஆப் ரெக்கார்டு ஆகிய இரு விருது நிறுவனங்களும் இணைந்து மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கியது.
மேலும் இந்த சாதனை முயற்சியை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் வகையில், பரிந்துரை செய்திருப்பதாகவும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: முஷ்டாக் அலி டி20 தொடர்: கேரளாவை அடித்து நொறுக்கிய தமிழ்நாடு அணி!