ஹாங்சோ :ஆசிய விளையாட்டு தொடரின் ஆடவருக்கான ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் பிரனாய் வெண்கலம் வென்றார்.
19வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் பிரனாய், சீனாவின் லி ஷின்பெங்கை எதிர்கொண்டார். முதல் செட்டை கைப்பற்றுவதில் இருவரிடையே போட்டா போட்டி நடைபெற்றது.
நுட்பமாக விளையாடி இருவரும் எதிரணி வீரருக்கு புள்ளிகள் விட்டுக் கொடுக்காமல் விளையாடுவதில் கெடுபிடி காட்டினர். போட்டா போட்டியாக சென்று கொண்டு இருந்த முதல் செட்டை ஒருவழியாக சீன வீரர் 21க்கு 16 என்ற கணக்கில் கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் தலைகீழ் நிலைமையாக மாறத் தொடங்கியது.
ஆரம்பம் முதலே சீன வீரர் கடும் நெருக்கடி கொடுக்கத் தொடங்கினார். அதிரடியாக விளையாடிய சீன வீரர் லி ஷென்பெங், இரண்டாவது செட்டையும் 21க்கு 9 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதனால் இந்தியாவின் பிரனாய் 21க்கு 16, 21க்கு 9 என்ற நேர் செட் கணக்கில் சீன வீரரிடம் தோல்வியை தழுவி வெண்கலம் வென்றார்.
அதேநேரம் வெண்கலம் வென்றாலும் பிரனாய் ஒரு சாதனைக்கு சொந்தக்காரராகி உள்ளார். ஆசிய விளையாட்டு ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற இரண்டாவது வீரர் என்ற சாதனைக்கு பிரனாய் சொந்தக்காரராகி உள்ளார். இதற்கு முன் கடந்த 1982 ஆம் ஆண்டு சையது மோடி தொடரில் இந்திய வீரர் பதக்கம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :India Vs Australia : மேட்ச் பார்க்க போறீங்களா! முதல்ல இதை படிச்சுட்டு போங்க! எவ்வளவு ரூல்சு?