சிம்லா:சரண்ஜித் சிங் 1964ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர். இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாகவும், மிட்-பீல்டராகவும் இருந்தவர். ஹாக்கியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, இமாச்சல பிரதேச பல்கலைக்கழகத்தில் உடல் கல்வித்துறை இயக்குநராக பணியாற்றினார். இந்தப் பணி ஒய்வுக்கு பிறகு வீட்டிலேயே இருந்தார்.
அவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவருக்கு பத்ம ஸ்ரீ, அர்ஜூனா விருதுகள் வழங்கப்பட்டன. அடுத்த மாதம் தனது 91ஆவது பிறந்த நாளை கொண்டாடவிருந்த நிலையில், நேற்று(ஜன.17) அவரது வீட்டில் மாரடைப்பால் காலமானார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு பக்கவாதம் ஏற்பட்டிருந்தது.