இந்திய தடகள வீராங்கனையான ஹிமா தாஸ், மகளிர் 200 மீட்டர் ஓட்டப்பந்தய பிரிவில் ஜூலை மாதத்தில் மட்டும் இதுவரை நான்கு தங்கப்பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெறுமை தேடி தந்துள்ளார். போட்டிக்கு போட்டி தனது ஆட்டத்திறனை மெருகேற்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறார். இதுவரை 200 மீட்டர் ஓட்டப் பந்தய பிரிவில் அசத்தி வந்த இவர், தற்போது 400 மீட்டர் ஓட்டப்பந்தய பிரிவிலும் அதகளப்படுத்த தொடங்கியுள்ளார்.
செக் குடியரசில் ஹிமா கொடி பறக்குது! - தடகளம் ஹிமா தாஸ்
செக் குடியரசு நாட்டில் நடைபெற்ற தடகள போட்டியில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் தங்மப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
செக் குடியரசு நாட்டில் நடைபெற்ற 400 மீட்டர் ஓட்டப்பந்தய பிரிவில் பங்கேற்ற இவர், இலக்கை 52.09 விநாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதன்மூலம், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீட்டர் பிரிவில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்ட அவர், தற்போது அதே பிரிவில் கம்பேக் தந்து மிரட்டியுள்ளார்.
எனினும், வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 400 மீட்டர் பிரிவில் பங்கேற்க வேண்டுமானால் இலக்கை 51.80 விநாடிகளில் கடக்க வேண்டும். இதனால், ஹிமா தாஸ் கண் இமைக்கும் நேரத்தில் இந்த தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இருப்பினும், மூன்றாவது வாரத்திற்குள் தடகள பிரிவில் ஐந்தாவது தங்கம் வென்ற தங்க மங்கை ஹிமா தாஸிற்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.