உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் தோஹாவில் செப்டம்பர் 27ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சமீபகாலமாக ஓட்டப்பந்தயப் பிரிவில் பல தங்கப்பதக்கங்களை வென்ற ஹீமா தாஸ் இந்தத் தொடருக்கான மகளிர் 400மீ பிரிவில் பங்கேற்கும் தகுதியை இழந்துவிட்டார்.
உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஹீமா தாஸ் - Hima das named in Indian squad for World Championships
டெல்லி: தோஹாவில் நடைபெறவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் 4*400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தய பிரிவுக்கான இந்திய அணியில் நட்சத்திர வீராங்கனை ஹீமா தாஸ் இடம்பெற்றுள்ளார்.

hima das
எனினும் அவர் மகளிர் 4*400மீ தொடர், கலப்பு 4*400மீ தொடர் ஓட்டப்பந்தயத்துக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இதனால், தனிநபருக்கான பிரிவில் அவர் பங்கேற்கவில்லை என்றாலும், அணி பிரிவில் நிச்சயம் தனது சிறப்பான ஆட்டத்தால் இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தை பெற்றுத் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தொடரில் 16 ஆண்கள், ஒன்பது பெண்கள் அடங்கிய 25 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது.
TAGGED:
Hima das