தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையிலான தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் நவம்பர் 30ஆம் தேதி தொடங்கிய 30ஆவது தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று முடிவு பெற்றது.
இன்று நடைபெற்ற நிறைவு விழாவில் பிரபல அமெரிக்க ராக் இசைக்குழுவின் முன்னணி பாடகரான அர்னல் பினடா பங்கேற்றார். இதில், பங்கேற்ற 11 நாடு வீரர்களும் தங்களது தேசியக் கொடியை ஏந்தி சென்றனர்.
முடிவு பெற்ற தென்கிழக்கு ஆசியப் போட்டிகள் இப்போட்டியில் பிலிப்பைன்ஸ் 149 தங்கம், 117 வெள்ளி, 121 வெண்கலம் என 387 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது. அவர்களைத் தொடர்ந்து வியாட்நாம் 98 தங்கம், 85 வெள்ளி, 105 வெண்கலம் என 288 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இதைத்தொடர்ந்து, 31ஆவது தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2021இல் வியாட்நாமில் நடைபெறம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க : இதை செய்யுங்கள் உலகக்கோப்பை உங்களுக்குதான் - கவாஸ்கர் அட்வைஸ்!