டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் சுடர் தொடர் ஓட்டமானது 13ஆவது நாளான இன்று (ஏப்.6) ஐச்சி மாகாணம் முழுவதும் பயணத்தைத் தொடர்ந்தது.
இன்று முதலில் ஒலிம்பிக் சுடரை ஏந்தி ஓடியவர் ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற ஜப்பானிய பனிச்சறுக்கு வீராங்கனை அகிகோ சுசுகி. அவரின் சொந்த ஊரான டொயோஹாஷி நகரத்தின் வழியாக இன்று ஓட்டத்தை மேற்கொண்டார்.
ஒலிம்பிக் சுடர் தொடரோட்டம் ஹண்டா கால்வாயில் படகின் மூலமும் ஒலிம்பிக் சுடர் கொண்டு செல்லப்பட்டது. அஞ்சோ நகரில், ஒலிம்பிக் ஜோதியை அகிஹிட்டோ கோட்டோ என்பவர் ஒரு ரோபோவுடன் சுடரை கொண்டு ஓடினார். மாலையில் ஒகாசாகி கோட்டையை சுடர் சென்றடைந்தது.
டோக்கியோ ஒலிம்பிக் சுடர் தொடரோட்டம், ஜப்பானின் 47 மாகாணங்களில் 121 நாட்களுக்கு நடைபெறுகிறது. இத்தொடர் ஓட்டம் ஜூலை 23ஆம் தேதி டோக்கியோவில் ஒலிம்பிக் திறப்பு விழாவில் முடிவடைகிறது.