தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

விளையாட்டுல அரசியல் பண்ணாம...அரசியல்ல விளையாட்ட காட்ட வராங்க..! - விளையாட்டு வீரர்கள்

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியளில் இந்திய விளையாட்டு வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

Haryana BJP candidates sports players

By

Published : Sep 30, 2019, 11:25 PM IST

மொத்தம் 90 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட ஹரியானா மாநிலத்தில் 1.82 கோடி வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, இந்திய தேசிய காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, பாரதிய லோக் தளம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டதில் பாஜக 47 இடங்களில் தனது பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்தாண்டு தேர்தல் நடைபெறவுள்ளதேதி அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று பாஜக கட்சி தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் குறிப்பிடத்தக்க வகையில் இந்தியாவின் விளையாட்டி வீரர்கள் பாஜக சார்பில் ஹரியானவில் போட்டியிடவுள்ளனர்.

தற்போதைய ஹரியான முதலமைச்சர் எம்.எல். கட்டார் கர்னல் தொகுதியில் போட்டியிடவுள்ளார். இந்தியாவின் மல்யுத்த வீரர்களான யோகேஷ்வர் தத் பரோடா தொகுதியிலும், இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் சிங் பெஹோவா தொகுதியிலும், மற்றொரு இந்திய மல்யுத்த வீரரான பபிதா போகத் தாத்ரி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

சமீப காலமாக விளையாட்டு வீரர்கள் அரசியலில் பங்கேற்று பல முன்னேற்றங்களை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details