பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த எஃப் ஒன் ரேஸ் வீரர் லீவிஸ் ஹேமில்டனுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் கரோனா உறுதிசெய்யப்பட்டது. இதன் காரணமாக கடந்த வாரம் பஹ்ரைனில் நடைபெற்ற போட்டியில் ஹேமில்டனால் பங்கேற்க முடியவில்லை.
இருப்பினும், 2020ஆம் ஆண்டிற்கான எஃப் ஒன் பட்டத்தை லீவிஸ் ஹேமில்டன் ஏற்கெனவே உறுதி செய்துவிட்டார். இதனால் பஹ்ரைன் பந்தயத்தில் கலந்துகொள்ளாதது எவ்வித பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.