சீனாவின் ஜியான் நகரில் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவர் 77 கிலோ கிரேகோ - ரோமன் (Greco-Roman) பிரிவின் இறுதிச் சுற்றில் இந்திய வீரர் குர்ப்ரீத் சிங், தென் கொரியாவின் ஹுயான்வூ கிம் (Hyeonwoo Kim) உடன் மோதினார்.
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு இரண்டு வெள்ளி! - Gurpreet Singh
ஜியான்: ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் குர்ப்ரீத் சிங், சுனில் குமார் ஆகியோர் வெள்ளிப்பதக்கம் வென்றனர்.
இப்போட்டியில், கிம்மின் ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தவித்த குர்ப்ரீத் சிங், 0-8 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். இதனால், இவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. ஆடவர் 77 கிலோ பிரிவின் இறுதிப் போட்டியில் தென் கொரியாவின் கிம்முடன் தோல்வி அடைந்ததால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
இதேபோல், நடைபெற்ற ஆடவர் 87 கிலோ ப்ரீஸ்டைல் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சுனில் குமார், ஈரான் நாட்டைச் சேர்ந்த ஹொசைன் அகமது நவ்ரியுடன் (Hossein Ahmad Nouri) தோல்வியுற்றார். இதனால், இவருக்கும் வெள்ளிப்பதக்கம் மட்டுமே கிடைத்தது.