2020ஆம் ஆண்டுக்கான பார்முலா ஒன் பந்தயம் ஆஸ்திரியாவில் கடந்த ஜூலை மாதம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. அதன்படி இந்தாண்டிற்கான பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ. 29) நடைபெற்றது.
இந்தப் போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஹாஸ் அணியின் ரோமெய்ன் க்ரோஸ்ஜீன் பெரும் விபத்தில் சிக்கினார். இதில் அவரது கார் இரண்டாக பிளந்தது. மேலும், காரிலிருந்து எரிபொருள் வெளியேறியதால், பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
அங்கிருந்தவர்களின் உதவியுடன் காரின் உள்ளே சிக்கியிருந்த ரோமெய்ன் க்ரோஸ்ஜீன் தட்டுத்தடுமாறி வெளியேவந்தார். சிறிய தீக்காயங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட அவர், உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிகிச்சை முடிந்து அவர் இன்று, மருத்துவமனையில் இருந்து திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.