அயர்லாந்தைச் சேர்ந்த தற்காப்புக் கலை வீரரான கனோர் மெக்கிரிகோர் (Conor Mcgregor) தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் (Ultimate Fighting Challenge 246) சிறந்த வீரராகத் திகழ்கிறார். தொழில்முறை குத்துச்சண்டை போட்டியின் ஃவெதர்வைட், லைட்வைட் என இரண்டு பிரிவுகளிலும் சிறப்பாக விளையாடக்கூடியவரான இவர், இன்று அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் வெல்டர்வைட் பிரிவில் நடந்த போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த டொனால்ட் செரோனுடன் ( Donald Cerrone) மோதினார்.
2018இல் ரஷ்யாவின் தற்காப்புக் கலை வீரர் கபிப் நுர்மகோமெதோவுடன் (Khabib Nurmagomedov) தோல்வி அடைந்த பிறகு இன்றுதான் தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் களமிறங்கினார். இதனால் இவரது ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.