செக் குடியரசில் நடைபெற்ற தபோர் தடகளப் போட்டியில், இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ் 11 நாட்களில் மூன்று தங்கம் வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். தற்போது, மீண்டும் ஒரு தங்கம் ஏறியுள்ளது இவரது மகுடத்திற்கு.
தடகளப் போட்டியில் 4ஆவது தங்கம் வென்ற "ஹிமா தாஸ்" - Hima Das Gold Medal
செக் குடியரசில் நடைபெற்ற தபோர் தடகளப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தய பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனை ஹிமா தாஸ் மீண்டும் தங்கம் வென்றார்.

தடகளப் போட்டியின் 200 மீட்டர் ஓட்டப்பந்தய பிரிவில் பங்கேற்ற ஹிமா, இலக்கை 23.25 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இம்முறை மிக குறைந்த நேரத்தில் எல்லையை கடந்து தனது ஆட்டத்திறனை மெறுக்கேற்றியுள்ளார். இவரைத் தொடர்ந்து, மற்றொரு இந்திய வீராங்கனையான வி.கே. விஸ்மயா வெள்ளி பதக்கம் வென்றார்.
ஜூலை 2ஆம் தேதி தொடங்கிய இவரது தங்க வேட்டைக்கான பயணம் நாட்டிற்கும், தடகள துறைக்கும் பெருமை சேர்த்துள்ளது. தற்போது, அஸ்ஸாம் மாநிலம் வெள்ளத்தால் கடும் பாதிப்படைந்துள்ளதால், இவர் தனது பாதி சம்பளத்தை நிதியாக வழங்கியுள்ளார்.