தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற இந்திய ஜோடி!

பாங்காக்கில் நடைபெற்றுவரும் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடரின், கலப்பு இரட்டையர் காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவின் சுரேக்கா - அபிஷேக் ஜோடி தங்கப் பதக்கத்தை வென்றது.

ArcheryChampionships
ArcheryChampionships

By

Published : Nov 27, 2019, 6:40 PM IST

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடர் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்றுவருகிறது. இதில், இந்திய வில்வித்தை சம்மேளனம் இடைநீக்கம் செய்யப்பட்டதால் இந்திய வீரர்கள் உலக வில்வித்தை அணியில் இடம்பெற்று விளையாடிவருகின்றனர்.

கலப்பு இரட்டையர் காம்பவுண்ட் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் உலக வில்வித்தையின் ஜோதி சுரேக்கா - அபிஷேக் வர்மா ஜோடி, சீனதைபேயின் சை - லுன் சென் / யி சுவான் சென் இணையை (Chieh - Lun- Chen / Yi- Hsuan- Chen) எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சுரேக்கா - அபிஷேக் ஜோடி 158- 151 புள்ளிகள் என்ற கணக்கில் வெற்றிபெற்று தங்கப் பதக்கத்தை பெற்று அசத்தியது.

அதேபோல், மகளிர் அணிகளுக்கான காம்பவுண்ட் பிரிவின் இறுதிப் போட்டியில் ஜோதி சுரேக்கா, முஸ்கன் கிரார், ப்ரியா குர்ஜார் அடங்கிய உலக வில்வித்தை அணி 215 - 231 என்ற புள்ளிகள் கணக்கில் செவான், யுன் சோ சாங், டேயோங் சியோல் (Chaewon So, Yun Soo Song, Dayeong Seol) ஆகியோர் அடங்கிய தென் கொரிய அணியிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கத்தை பெற்றது.

முன்னதாக, ஆடவர் அணிகளுக்கான காம்பவுண்ட் பிரிவின் இறுதிப் போட்டியில் அபிஷேக் வர்மா, ரஜத் சவுகான், மோகன் பரத்வாஜ் ஆகியோர் அடங்கிய உலக வில்வித்தை அணி 232 - 233 என ஒரு புள்ளிகள் வித்தியாசத்தில் தென் கொரியாவின் கியூ சோய், யாங்கி சோய், ஜேவான் சோய் (Kyu Choi, Yonghee Choi, Jaewon Choi) ஆகியோரிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கத்தை பெற்றது. முன்னதாக, இந்தத் தொடரின் ஆடவர், மகளிர், கலப்பு இரட்டையர் ரிகர்வ் இந்திய வீரர்கள் வெண்கலம் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்: மூன்று பிரிவுகளிலும் வெண்கலம் வென்ற இந்திய வீரர்கள்!

ABOUT THE AUTHOR

...view details