தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தாய்லாந்தில் நடந்த யோகா: தங்கம், வெள்ளி வென்று தமிழ்நாடு மாணவர்கள் அசத்தல்! - சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

சென்னை: தாய்லாந்தில் நடைபெற்ற உலக யோக போட்டியில் பதக்கம் வென்று நாடு திரும்பிய தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

yoga competition in Thailand
yoga competition in Thailand

By

Published : Dec 10, 2019, 7:49 PM IST

தாய்லாந்து நாட்டில் கடந்த 7ஆம் தேதி உலக அளவில் யோகா போட்டி நடைபெற்றது. இதில் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தாய்லாந்து, இந்தியா ஆகிய ஐந்து நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். இதில் இந்தியா சார்பில் 75 பேரும் குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து ஐந்து பேர் கலந்துகொண்டனர்.

பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியில், கோவையைச் சேர்ந்த மாணவர்கள் சக்திவேல் (14), சரவணன் (14), அஸ்வர்த் (12), சார்த்விகா (12), சஹா (8) ஆகிய மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு இரண்டு தங்கம், மூன்று வெள்ளிப்பதக்கங்கள் வென்று அசத்தினர்.

அதன்பின் இன்று நாடு திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு சென்னை விமான நிலையத்தில் பெற்றோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தாய்லாந்து யோக போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்கள்

தனியார் யோகா பள்ளியைச் சேர்ந்த கணேஷ் அளித்த பேட்டியில், "இன்டர்நேஷனல் யூத் யோகா பெடரேஷன் மையத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு உலக அளவில் நடைபெற்ற யோகா போட்டியில் கலந்துகொண்டோம். நாங்கள் இரண்டு தங்கப் பதக்கமும் மூன்று வெள்ளிப் பதக்கங்களும் வென்றுள்ளோம். இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாடு அரசுப் பள்ளிகளிலும் யோகாவை கற்றுத்தர வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.

மேலும் அவர் கூறுகையில், அரசுப் பள்ளிகளில் யோகா கற்றுத் தருவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். இதற்கென தமிழ்நாடு அரசு அனுமதி தர வேண்டும் என வேண்டுகோள்விடுத்தனர்.

இதையும் படிங்கள்:பூமா நிறுவனத்துடன் ஒப்பந்தமான இந்திய அணி கேப்டன்!

ABOUT THE AUTHOR

...view details