தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்த பஞ்ச் எப்படி இருக்கு! மைக் டைசனை இம்ப்ரஸ் செய்த செரீனா வில்லியம்ஸ்! - மைக் டைசனிடம் குத்துச்சண்டை பயிற்சிபெறும் செரீனா

அமெரிக்க டென்னிஸ் நட்சத்திர வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசனிடம் குத்துச்சண்டை பயிற்சிபெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

Serena Williams with Mike Tyson
Serena Williams with Mike Tyson

By

Published : Dec 22, 2019, 11:42 PM IST

டென்னிஸ் போட்டியின் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். 38 வயதான இவர் இதுவரை மகளிர் ஒற்றையர் பிரிவில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தனது ஆதிக்கத்தை செலுத்திவருகிறார். இவர் இன்னும் ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் பட்சத்தில், டென்னிஸில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை மார்கரெட் கோர்ட்டின் சாதனைய சமன் செய்வார்.

அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இவர் இச்சாதனையை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, அமெரிக்காவின் புகழ்பெற்ற குத்துச்சண்டை ஜாம்பவானான மைக் டைசனிடம் செரீனா குத்துச்சண்டையில் உள்ள நுணக்கங்களை பயிற்றுவித்தார். இதையடுத்து, மைக் டைசனிடம் செரீனா பயிற்சி பெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

செரீனாவின் குத்துச்சண்டை திறமையைக் கண்டு மைக் டைசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "தலைசிறந்த வீராங்கனையான இவருடன் களத்தில் குத்துச்சண்டை போட்டியிட தான் விரும்பவில்லை" என குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க:USOPEN: இறுதிச் சுற்றில் செரினாவை அப்செட் செய்த இளம் கனடா வீராங்கனை!

ABOUT THE AUTHOR

...view details