தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சர்வதேச குத்துச்சண்டை: தங்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பாராட்டு மழை! - இந்திய வீரர்கள்

டெல்லி: போலாந்தில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை தொடரில் தங்க வென்ற இந்தியா வீரர்களான கவுரவ் சோலங்கி, மனிஷ் கௌஷிக் ஆகியோருக்கு பாராட்டு மழை பொழிந்து வருகின்றது.

தங்கம் வென்ற இந்திய வீரர்கள்

By

Published : May 6, 2019, 9:50 AM IST

போலாந்தின் வர்சா நகரில் ஃபெலிக்ஸ் ஸ்டாம் சர்வதேச குத்துச்சண்டை தொடர் நடைபெற்றது. இதில், 52 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீரர் கவுரவ் சோலங்கி இங்கிலாந்தின் வில்லியம் காலேவை எதிர்கொண்டார். இதில், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சோலங்கி 5-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று தங்கம் வென்றார்.

இதேபோன்று, 69 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் மனிஷ் கௌஷிக், மொராக்கோ நாட்டின் முகமது ஹமவுட்டை 4 -1 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

இதற்கிடையே, இந்தியாவின் மற்ற வீரர்களான ஹுசாமுதீன் வெள்ளிப் பதக்கத்துடனும், மந்தீப் ஜங்ரா, சன்ஜீத், அன்கீத் காடானா ஆகியோர் வெண்கலப் பதக்கத்துடனும் தாயகம் திரும்பினர்.

ABOUT THE AUTHOR

...view details