ஆசியக் கோப்பை டேபிள் டென்னிஸ் தொடர் ஜப்பானின் யோகோஹாமா நகரில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு பிளே ஆஃப் சுற்றில் இந்திய வீரர் ஞானசேகரன் சத்தியன், 11-13, 11-7, 11-8, 11-6 என்ற செட் கணக்கில் கசகஸ்தானின் கிரில் ஜெராசிமேன்கோவை (kiril Gerassimenko) வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
டேபிள் டென்னிஸ்: காலிறுதி சுற்றில் சத்தியன் தோல்வி! - டேபிள் டென்னிஸ் சத்தியன்
யோகோஹாமா: ஆசியக் கோப்பை டேபிள் டென்னிஸ் தொடரின், ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் இந்திய வீரர் ஞானசேகரன் சத்தியன் தோல்வி அடைந்துள்ளார்.
![டேபிள் டென்னிஸ்: காலிறுதி சுற்றில் சத்தியன் தோல்வி!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2918957-thumbnail-3x2-sathyan.jpg)
இதைத்தொடர்ந்து, நடைபெற்ற காலிறுதிப் போட்டியில், அவர் சீன வீரர் மா லாங் (MA Long) உடன் மோதினார். இதில், முதல் இரண்டு செட்களில் 5-11, 5-11 என்ற கணக்கில் தோல்வி அடைந்த சத்தியன்,மூன்றாவது செட்டில் சிறப்பாக ஆடி 11-6 என்ற கணக்கில் வெற்றிபெற்றார்.
இருப்பினும், தனது ஆதிக்கத்தை அடுத்த இரண்டு செட்களில் அவர், 6-11, 3-11 என்ற கணக்கில் மா லாங்கிடம் சரணடைந்தார். இதன் மூலம், சத்தியன் 5-11, 5-11, 11-6, 6-11, 3-11 என்ற செட் கணக்கில் லா மாங்கிடம் தோல்வி அடைந்தார். இந்தியா சார்பில் இந்தத் தொடரில் காலிறுதி வரை முன்னேறிய ஓரே வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வீரர் சரத் கமல், இந்திய வீராங்கனை மணிகா ஆகியோர் இந்தத் தொடரின் குரூப் ஆட்டத்தில் இருந்து வெளியேறினர்.