பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் நள்ளிரவு நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சும் - ஸ்பெயினின் ரபேல் நடாலும் மோதினர்.
முதல் செட்டை நடால் 6க்கு 2 என்ற கணக்கில் கைப்பற்றினார், இரண்டாவது செட்டை 4க்கு 6 என்ற கணக்கில் ஜோகோவிச் கைப்பற்ற ஆட்டம் சூடுபிடித்தது. இதையடுத்து தனது முழு அனுபவத்தையும் பயன்படுத்திய ரபேல் நடால் மூன்றாவது செட்டை 6க்கு 2 என்ற கணக்கில் தனதாக்கினார்.
4 செட் ஆட்டம் டை பிரேக் வரை செல்ல 7க்கு 6 என்ற கணக்கில் அந்த செட்டையும் கைப்பற்றினார் நடால். இரண்டாவது செர்வில் நடாலின் வெற்றி 69 சதவீதமாகவும் , ஜோகோவிச்சின் வெற்றி 46 சதவீதமாகவும் இருந்தது.
இதுவே ஜோகோவிச் பல புள்ளிகளை இழக்க காரணியாக இருந்தது. வரும் 3ஆம் தேதி நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் ரபேல் நடால் , ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவை எதிர்கொள்கிறார்.
இதையும் படிங்க: பாராலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு; எல்.முருகன் நேரில் பாராட்டு