பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள புகழ்பெற்ற ரோலண்ட் கரோஸ் மைதானத்தில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் 2022 தொடர் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டியில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த உலகின் 5ஆம் நிலை வீரர் ரஃபேல் நடால், நார்வேவின் இளம் வீரர் கேஸ்பர் ரூட் உடன் இன்று (ஜூன் 5) மோதினார்.
இதில், ஆரம்பத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய நடால் 6-3, 6-3, 6-0 என்ற நேர் செட்களில் ரூட்டை வீழ்த்தி தனது 14ஆவது முறையாக பிரெஞ்சு ஓபன் கோப்பையை கைப்பற்றியுள்ளார். 'களிமண் தரை ஆடுகளங்களின் அரசன்' என்றழைக்கப்படும் நடால் இந்த வெற்றியின் மூலம் தனது 22ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.