நாகப்பட்டினம் மாவட்டத்தில், லிபர்டி கூடைப்பந்தாட்டக் கழகம் மற்றும் மாவட்ட விளையாட்டுக் கழகம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஏழு நாள் இலவச விளையாட்டுப் பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற கூடைப்பந்தாட்டப் பயிற்சி முகாமில் 5ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் 60க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் இதில் பங்கேற்றனர்.
பயிற்றுநர்கள் வழங்கிய பயிற்சிகளை முடித்த மாணவ, மாணவிகளுக்கு இறுதி நாளான இன்று சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், சீருடை மற்றும் விளையாட்டு பந்துகளை லிபர்டி கூடைப்பந்தாட்டக் கழக நிர்வாகிகள் வழங்கிப் பாராட்டினர்.