உலகின் அதிகளவிலான ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சியாக திகழ்வது WWE எனப்படும் உலக மல்யுத்த பொழுதுபோக்கு நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியின் முன்னாள் நட்சத்திர வீரராக வலம் வந்தவர் ஷாட் காஸ்பார்ட்.
இந்நிலையில் இவர் கடந்த வாரம் அவரது மகனுடன் கடலில் நீந்த சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கடலின் ஆழமான பகுதிக்கு சென்ற ஷாட் காஸ்பார்ட், கடலலையில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளார்.
இதனையடுத்து லாஸ் ஏஞ்சலஸ் காவல் துறையினர், கடற்படையினரின் உதவியோடு காஸ்பார்ட்டை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனார். இந்நிலையில் காஸ்பார்ட்டின் உடல் லாஸ் ஏஞ்சலஸ் கடற்கரைப் பகுதியில் இன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு மல்யுத்த வீரர்கள் மற்றும் திரைத்துறையினர் காஸ்பார்ட்டின் இறப்பிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
39 வயதேயான காஸ்பார்ட், 2008 ஆம் ஆண்டு முதல் உலக பொழுதுபோக்கு மல்யுத்த போட்டிகளில் பங்கேற்றுவந்தார். மேலும் இவர் இதற்கு முன்னதாக ஜார்ஜியா கூடைப்பந்து அணியின் வீரராகவும், மைக் டைசன், பிரிட்னி ஸ்பியர்ஸ், டிட்டி ஆகியோரின் பாதுகாவலராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:வங்கதேச கிரிக்கெட் தரம் உயர்ந்துள்ளது: வாசிம் அக்ரம்...!