தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கோவிட்-19: வாலிபால் தொடர்களை ஒத்திவைத்தது எஃப்ஐவிபி - சர்வதேச வாலிபால் கூட்டமைப்பு

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக நான்கு முக்கியமான வாலிபால் தொடர்களை வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக சர்வதே வாலிபால் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

FIVB postpones four volleyball tournaments amid COVID-19 outbreak
FIVB postpones four volleyball tournaments amid COVID-19 outbreak

By

Published : Mar 21, 2020, 5:29 PM IST

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர். இதன் காரணமாக பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அந்த வரிசையில் மே மாதம் தொடங்கவிருந்த நான்கு முக்கிய வாலிபால் தொடர்களை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைப்பதாக சர்வதேச வாலிபால் கூட்டமைப்பு (எஃப்ஐவிபி) தெரிவித்துள்ளது. அதன்படி மே 6ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதிவரை நடத்தப்படவிருந்து நான்கு ஸ்டார் தொடர்களையும் ஒத்திவைத்தது எஃப்ஐவிபி.

இது குறித்து எஃப்ஐவிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தற்போதுள்ள சூழ்நிலையில் தொடர் அமைப்பாளர்கள், வீரர்களின் நலனைக் கருத்தில்கொண்டு வாலிபால் தொடர்களை ரத்துசெய்யவும், ஒத்திவைக்கவும் அனுமதியளியளித்தனர்.

இதனையடுத்து வருகிற மே மாதம் நடக்கவிருந்த நான்கு முக்கிய வாலிபால் தொடர்களையும் ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜூன் மாதம் திட்டமிடப்பட்டிருந்த வாலிபால் தொடர்களைப் பற்றி மறுமதிப்பீடு செய்யவும் எஃப்ஐவிபி முடிவுசெய்துள்ளதாகவும், கடற்கரை வாலிபால் தொடர்களின் தேதிகளும் விரைவில் மாற்றப்படும் என்றும், டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகளை ஒத்திவைப்பது குறித்து சர்வதேச ஒலிம்பிக் குழுவுடன் (ஐஓசி) கலந்தாலோசிக்க உள்ளதாகவும் எஃப்ஐவிபி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:தைவானிய வீரருக்கு கோவிட்-19 உறுதி: அதிர்ச்சியில் சாய்னா, பொன்னப்பா!

ABOUT THE AUTHOR

...view details