மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் பிராதான திட்டமான ஃபிட் இந்தியா தற்போது, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திற்கு கீழ் இருக்கும் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவு திறன் துறையுடன் கைகோத்துள்ளது. இவை இரண்டும் இணைந்து, இந்தியப் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் பள்ளிக் குழந்தைகளிடம் கொண்டுசேர்க்கும் விதமாக, 10 உள்நாட்டு விளையாட்டுகள் குறித்த சிறப்புத் திரைப்படங்களை வெளியிடவிருக்கின்றன.
உள்நாட்டு விளையாட்டுகளை ஊக்குவிக்க களமிறங்கும் ஃபிட் இந்தியா! - Fit India
டெல்லி: உள்நாட்டு விளையாட்டுகள் குறித்து பள்ளிக் குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஃபிட் இந்தியாவுடன் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இணைந்து சிறப்புத் திரைப்படங்களை வெளியிடுகிறது.
![உள்நாட்டு விளையாட்டுகளை ஊக்குவிக்க களமிறங்கும் ஃபிட் இந்தியா! Fit India, HRD Ministry to launch special films to promote indigenous sports of India](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7493562-4-7493562-1591372494083.jpg)
Fit India, HRD Ministry to launch special films to promote indigenous sports of India
கோ-கோ, கபடி, களரி, கயிறு இழுக்கும் போட்டி உள்ளிட்ட பத்து விளையாட்டுகள் குறித்த திரைப்படங்கள் ஜூன் 8ஆம் தேதி முதல் ஜூன் 19ஆம் தேதி வரை திரையிடப்படுகின்றன. இப்படங்கள் காலை 11 மணிக்கு ஃபிட் இந்தியாவின் யூட்யூப் பக்கம் மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் அனைத்து சமூக வலைதளப் பக்கங்களிலும் ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.