தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டோக்கியோ ஒலிம்பிக் நடக்குமா நடக்காதா? - டோக்கியோ ஒலிம்பிக் 2021

டோக்கியோ ஒலிம்பிக் தொடர் நடைபெறுமா என்பது குறித்து அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் தான் முடிவு எடுக்கப்படும் என ஜப்பான் நாட்டின் அமைச்சர் தொஷியாக்கி ஒஎன்டோ தெரிவித்துள்ளார்.

Tokyo Olympic
Tokyo Olympic

By

Published : Jun 6, 2020, 4:03 AM IST

விளையாட்டு ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 24ஆம் தேதி நடைபெறவிருந்தது. ஆனால் கரோனா வைரஸ் காரணமாக இந்தப் போட்டி அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கரோனா வைரஸ் அடுத்த ஆண்டிற்குள் கட்டுக்குள் வரவில்லை என்றால் இந்த தொடர் ரத்து செய்யப்படும் என தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில் இது குறித்து ஜப்பான் நாட்டின் ஒலிம்பிக் அமைச்சர் தொஷியாக்கி ஒஎன்டோ கூறுகையில், "அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஒலிம்பிக் தொடருக்காக விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்யலாமா போன்ற பல்வேறு முக்கிய கேள்விகள் எழும். அப்போதைய நிலைமையைப் பொறுத்து நாங்கள் அதற்கு தீர்ப்பு வழங்குவோம். எனவே ஒலிம்பிக் தொடர் நடைபெறுவது குறித்து மார்ச் மாதத்தில்தான் முக்கிய முடிவு எடுக்கப்படும்" என்றார்.

முன்னதாக ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை ஒழுங்குப்படுத்துவதற்கு ஜப்பான் பரிசீலித்து வருவதாக டோக்கியோ கவர்னர் கொய்க் யூரிகோ தெரிவித்தார்.

இதையும் படிங்க: உலக சுற்றுச்சூழல் தினம் குறித்து ரோகித் சர்மா ட்வீட்!

ABOUT THE AUTHOR

...view details