தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#RugbyWorldCup2019: 'உன்ன அடிச்சுதாண்டா நான் பெரிய ஆள் ஆகணும்' - ஜார்ஜியாவுக்கு எதிராக முதல் வெற்றியைப் பதிவு செய்த பிஜி! - ரக்பி உலகக்கோப்பை தொடர் தர்போது வரை

டோக்கியோ: உலகக்கோப்பை ரக்பி தொடரின் லீக் ஆட்டத்தில் பிஜி அணி 45-10 என்ற புள்ளிக்கணக்கில் ஜார்ஜியா அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

#RugbyWorldCup2019

By

Published : Oct 3, 2019, 6:31 PM IST


உலகக்கோப்பை ரக்பி தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள பிஜி அணி ஜார்ஜியா அணியை எதிர்கொண்டது.

இத்தொடரில் ஏற்கனவே பிஜி அணி பங்கேற்ற இரண்டு லீக் ஆட்டத்திலும் மோசமான தோல்வியைச் சந்தித்து குரூப் டி பட்டியலில் கடைசியிடத்திற்குத் தள்ளப்பட்டிருந்தது. ஜார்ஜியா அணி இத்தொடரில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியைச் சந்தித்து குரூப் டி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்தது.

இதனால் இன்று நடைபெற்ற போட்டியில் தனது முதல் வெற்றியை ஈட்டுவதற்காக களமிறங்கிய பிஜி அணி எதிரணியை புரட்டி எடுத்தது. இதனால் ஆட்ட நேர முடிவில் பிஜி அணி 45 -10 என்ற புள்ளிக்கணக்கில் ஜார்ஜியா அணியை பதம்பார்த்தது.

இந்த வெற்றியின் மூலம் பிஜி அணி உலகக்கோப்பை ரக்பி தொடரில் தனது முதல் வெற்றியைப் பெற்று குரூப் டி புள்ளிப்பட்டியளில் ஏழு புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. ஆனால், இத்தோல்வியினால் குரூப் டி புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: #RugbyWorldCup2019: தொடர் வெற்றிகளில் பிரான்ஸ்...தொடர் தோல்விகளில் அமெரிக்கா!

ABOUT THE AUTHOR

...view details