தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஃபிஃபா: சவுதி அரேபியா வெற்றி... மெஸ்ஸி ரசிகர்கள் கவலை... - உலகக் கோப்பை கால்பந்து போட்டி

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சவுதி அரேபியா 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது.

FIFA World Cup
FIFA World Cup

By

Published : Nov 22, 2022, 9:32 PM IST

Updated : Nov 22, 2022, 10:38 PM IST

லுசைல்:உலக கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் நடைபெற்றுவருகின்றன. இன்றைய போட்டியின் (குரூப் சி அணிகள்) 2ஆவது ஆட்டத்தில் லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா மற்றும் சலே அல் ஷெஹ்ரி தலைமையிலான சவுதி அரேபியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் 10ஆவது நிமிடத்திலேயே அர்ஜென்டினா அணிக்கு பெனால்டி கிக் கிடைத்தது. அதைப் பயன்படுத்திக்கொண்ட லியோனல் மெஸ்சி முதலாவது கோல் அடித்தார். அந்த வகையில் முதல் பாதி 1-0 என்ற கோல் கணக்கில் முடிந்தது.

அதன்பின் 2ஆவது பாதி தொடங்கிய 3 நிமிடங்களிலேயே சலே அல் ஷெஹ்ரி கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்துவிட்டார். இதன்காரணமாக இரு அணிகளும் வெற்றிக்காக போராடின. ஆட்டம் முடிய 8 நிமிடங்களே இருக்கும் நேரத்தில் சவுதி அரேபியாவின் சேலம் அல்-தவ்சாரி கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

இதனிடையே மெஸ்ஸி, லாடரோ மார்டினெஸ் இருவரும் எவ்வளவு முயற்சித்தும் சவுதி அரேபியாவின் கோல் கீப்பர் அல்-ஓவைஸ் தடுத்துவிட்டார். இந்த வெற்றியால் புகழ்ப்பெற்ற மெஸ்ஸி ரசிகர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். முதலாவதாக குரூப் பியில் அமெரிக்காவுக்கும் வேல்ஸ் அணிக்கும் இடையே நடந்த போட்டி டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நியூசிலாந்து டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா

Last Updated : Nov 22, 2022, 10:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details