பாகு:அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்று வரும் ஃபிடே உலகக்கோப்பை செஸ் போட்டியின் இறுதிப் போட்டியில் டைபிரேக்கர் தற்போது தொடங்கியது. இதில் மிகவும் விறுவிறுப்பாக ஆட்டம் நடந்த நிலையில், டைபிரேக்கர் முதல் சுற்றின் முடிவில் 1-0 என்ற கணக்கில் நார்வேயின் கார்ல்சன் வெற்றி பெற்றார். இதில் இந்தியாவின் பிரக்ஞானந்தா கடுமையான முயற்சியை மேற்கொண்டார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார் கார்ல்சன்.. இறுதி வரை போராடிய பிரக்ஞானந்தா! - பிரக்ஞானந்தா
praggnanandhaa in FIDE tiebreaker: ஃபிடே உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை நார்வேயின் கார்ல்சன் 6வது முறையாக வென்று உள்ளார்.
![உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார் கார்ல்சன்.. இறுதி வரை போராடிய பிரக்ஞானந்தா! Etv Bharat](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/24-08-2023/1200-675-19346948-thumbnail-16x9-chessss.jpg)
Published : Aug 24, 2023, 3:40 PM IST
|Updated : Aug 24, 2023, 5:19 PM IST
இதனையடுத்து டைபிரேக்கர் முறையின் இரண்டாவது சுற்று தொடங்கியது. இதில் கறுப்பு நிறக் காய்கள் உடன் விளையாடிய பிரக்ஞானந்தா கடும் முயற்சியுடன் விளையாடினார். இருப்பினும், இறுதியாக டைபிரேக்கர் சுற்றின் இரண்டாவது சுற்று 0.5 - 0.5 என்ற கணக்கில் நிறைவு பெற்றது.
இதனால் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். இதன் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை 6வது முறையாக கார்ல்சன் வென்று உள்ளார். இறுதி வரை போராடிய இந்தியாவின் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.