உலக ஸ்போர்ட்ஸ் கார்களின் முன்னோடியாகத் திகழ்வது ஃபெர்ராரி என அழைக்கப்படும் கார் நிறுவனமே. இந்நிறுவன அதிசக்திவாய்ந்த ஸ்போர்ட்ஸ் கார்களை உருவாக்குவதில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து கொடிகட்டிப் பறந்துவருகிறது.
அந்த வகையில் கார்களுக்கு இடையிலான பந்தயமான ஃபார்முலா 1 பந்தயத்திற்கான கார்கள் உற்பத்தியிலும் ஃபெர்ராரியின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே கருதப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஃபார்முலா 1 சீசனின்போது ஃபெர்ராரியின் கார்கள் வழக்கத்தைவிட அதிகப்படியான எரிபொருள் செலவீனத்தை மேற்கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பு இவ்வழக்கை விசாரித்தது. மேலும் அதற்கு தீர்வளிக்கும்விதத்தில், ஃபெர்ராரியின் கார்கள் அதன் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச எரிபொருள் ஓட்டத்தை மீறிவிட்டால், அதனை முறையாக விதிப்படி சரிசேய்ய வேண்டுமெனக் கூறியது. மேலும் ஃபெர்ராரி இயந்திர விதியை மீறியதற்கான எந்தவொறு சாட்சிகளும் இல்லாததால் இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் உத்தரவிட்டுள்ளது.
சர்ச்சையில் சிக்கிய ஃபெர்ராரி ஆனால் எஃப்.ஐ.ஏ. மேற்கொண்ட பல மாத விசாரணைகளுக்குப் பிறகு, இந்த விஷயத்தை முடிவுக்கு கொண்டுவர ஃபெர்ராரியுடனான இந்தத் தீர்ப்பினை கடுமையாக எதிர்க்கிறோம் என மற்ற ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனங்கள் குற்றஞ்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ் டா...