இந்தியாவின் நட்சத்திர மல்யுத்த வீராங்கனையான ரிது போகத் தற்போது தற்காப்பு கலை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் சிங்கப்பூரில் நடைபெற்றுவந்த ஒன் சாம்பியன்ஷிப் தற்காப்பு கலைகள் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்றார்.
இதில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பிலீப்பைன்ஸ் வீராங்கனை ஜோமரி டோரஸை வீழ்த்தி ரித்து போகத் நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தினார். இந்நிலையில் ஈடிவி பாரத்தின் நேர்காணலில் பங்கேற்ற ரித்து போகத், எம்.எம்.ஏ (mixed martial arts) விளையாட்டில் இந்திய அணிக்காக சாம்பியன்ஷிப் பெல்டை கைப்பற்றுவதே எனது கனவு என தெரிவித்துள்ளார்.
ரித்து போகத்தின் நேர்காணல்
’இந்தியாவிற்காக சாம்பியன்ஷிப் பெல்ட்டை கைப்பற்றுவதே எனது கனவு' கேள்வி:மல்யுத்த வீராங்கனையாக இருந்த நீங்கள் தற்போது கலப்பு தற்காப்பு கலை (எம்.எம்.ஏ) விளையாட்டில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளீர்கள். மல்யுத்தத்திலிருந்து எம்.எம்.ஏவிற்கு மாறுவது எவ்வளவு கடினம்?
ரித்து போகத்: நான் மல்யுத்த விளையாட்டிலிருந்து எம்.எம்.ஏவிற்கு வந்தது எனக்கு நன்மையையே வழங்கியுள்ளது. ஏனெனில் இந்த விளையாட்டின் தரவரிசையில் இருக்கும் முதல் 10 வீரர்கள் மல்யுத்த விளையாட்டிலிருந்து வந்தவர்களாகத்தான் இருப்பார்கள். மேலும் மல்யுத்த வீரர்கள் எம்.எம்.ஏ விளையாட்டில் எளிதாக பயனடைய முடியும்.
கேள்வி:நீங்கள் மல்யுத்தத்தை விடுத்து, எம்.எம்.ஏ விற்கு மாற முடிவு செய்துள்ளீர்கள் என்று சொன்னபோது உங்கள் தந்தையின் (மகாவீர் சிங் போகத்) முடிவு என்னவாக இருந்தது?
ரித்து போகத்: நான் யூடியூபில் கலப்பு தற்காப்பு கலை காணொலியை அதிகம் பார்த்துள்ளேன். அதுதான் என்னை இந்த விளையாட்டிற்கு ஈர்த்தது. இந்தியாவில் உள்ள பயிற்சி மையங்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. சண்டைகளைப் பார்ப்பது எனக்குப் பிடித்திருந்தது. அதிலும் ரஷ்யாவின் கபீப் நிறைய சண்டையிடுவதை நான் பார்த்துள்ளேன்.
ஆனால் ஏன் இந்த விளையாட்டில் இந்தியாவை யாரும் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை என்ற ஆச்சரியம் இருந்தது. அதன்பின் ஆசியாவின் மிகப்பெரும் ஒரு ஜிம்மிலிருந்து எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. நான் மல்யுத்த விளையாட்டில் அதிக ஆர்வத்தில் இருந்ததால், அவர்கள் என்னை கலப்பு தற்காப்பு கலை விளையாட்டில் சேரும் படி கேட்டார்கள்.
அந்த நேரத்தில், நான் மல்யுத்தத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்தேன். மேலும் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கும் தகுதி பெற்றிருந்தேன். அதனால் இந்த விஷயத்தை நான் முதலில் எனது சகோதரியிடம் கூறினேன். அவர்கள் என் தந்தையிடன் இதுகுறித்து பேசினர். முதலில் அவர்கள் ஒலிம்பிக் போட்டிகளின் நான் பங்கேற்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தனர்.
பின்னர் நான் எம்.எம்.ஏ விளையாட்டில் கொண்டிருந்த ஆர்வத்தைக் கண்டு, அவர்கள் எனக்கு ஆதரவளித்தனர். மேலும் அப்போது என் தந்தை என்னிடம், நீ மல்யுத்த விளையாட்டில் பங்கேற்றாலும் சரி, இல்லை எம்.எம்.ஏ விளையாட்டில் பங்கேற்றாலும் சரி நம் நாட்டிற்கு உன்னால் பெருமை கிடைக்க வேண்டும் என்பதில் கவனமாக இரு என்று கூறினார். அவரின் அந்த உத்வேகமளிக்கும் வார்த்தைகளால் இன்று நான் நாட்டிற்கு பெருமை தேடித்தந்துள்ளேன்.
கேள்வி: மகளிர் ஆட்டொம் (ATOM) பிரிவில் நீங்கள் எதிர்த்து விளையாட விரும்பு நபர் யார்?
ரித்து போகத்: நான் பங்கேற்று வரும் 52 கிலோ எடைப்பிரிவில் எப்போது கடுமையான சவால்களை சந்தித்துள்ளேன். இப்போட்டியில் பங்கேற்கும் எவரையும் அவ்வளவு எளிதாக எண்ணமுடியாது. ஏனேனில் அவர்கள் அனைவரும் முறையான பயிற்சிகளைப் பெற்று வருபவர்கள். அதனால் எதிர்காலத்தில் நான் யாருடன் விளையாடவுள்ளேன் என்று கேட்டால், இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அனைவரையும் எதிர்த்து விளையாட வேண்டும் என்று தான் கூறுவேன்.
கேள்வி:தற்போதுவரை நீங்கள் நான்கு முறை எம்.எம்.ஏ சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளீர்கள். இருப்பினும் எம்.எம்.ஏ உலக சாம்பியன்ஷிப் போட்டி குறித்த உங்களது எண்ணம் எவ்வாறு உள்ளது?
ரித்து போகத்: நான் எனது ஒவ்வொரு போட்டியிலிருந்து புதியாக ஏதேனும் ஒன்றை கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். அதிலும் தற்போது நான் நான்காவது முறையாக எம்.எம்.ஏ சாம்பியன் பட்டத்தை வென்றிருப்பது, எனது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இதன் மூலம் நான் படிப்படியாக எனது இலக்கை நோக்கி வருகிறேன் என்பது தெரிகிறது.
மேலும் வரவுள்ள எம்.எம்.ஏ உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வென்று இந்தியாவுக்காக சாம்பியன்ஷிப் பெல்டை கைப்பற்ற வேண்டும் என்பதே எனது கனவு. இதை எனது நாட்டிற்காக நான் நிச்சயம் செய்வேன் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:உலக அரங்கில் தமிழ் வர்ணனையை தூவிய அப்துல் ஜப்பார் காலமானார்!