தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இம்மண்ணுக்கான விளையாட்டு கபடி! - மனம் திறக்கும் ஹரியானா கேப்டன் கண்டோலா - புரோ கபடி லீக் நேர்காணல்

ஹரியானா டீலர்ஸ் அணியின் கேப்டன் கண்டோலா, அவர் எதிர்கொண்ட தடைகள், நாடு ஏன் விளையாட்டின் மீது காதல் கொண்டுள்ளது என்பதைப் பற்றி நமது ஈடிவி பாரத்துடனான கலந்துரையாடலின்போது விவரித்துள்ளார்.

டீலர்ஸ் கேப்டன்
டீலர்ஸ் கேப்டன்

By

Published : Jan 14, 2022, 10:56 PM IST

ஹைதராபாத்: ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியின் கேப்டனான விகாஷ் கண்டோலாவுக்கு கபடி என்பது அவரது உணர்வோடு கலந்தது. ஏழாம் வகுப்பிலிருந்து காலைப்பொழுதில் கபடி ஆடத் தொடங்கிய கண்டோலா இவ்விளையாட்டின் மீது தீராக் காதல் கொண்டுள்ளார் என்றே சொல்லலாம்.

உலகின் பிற நாடுகள் கிரிக்கெட் மீது ஆர்வத்துடன் இருந்தபோது, ஹரியானாவின் ஜிந்த் மாவட்டத்தின் புடெய்ன் கிராமமே கபடி மீது மோகம் கொண்டது. சிறுவர்கள் கோடையிலும் ஆக்ரோசமாக கபடி ஆடுவார்கள்.

இது குறித்து செல்போனில் கண்டோலா நமது ஈடிவி பாரத்திடம் கூறுகையில், நான் அவர்களின் வழியைப் பின்பற்றி விளையாட்டை ரசிக்க ஆரம்பித்தேன் என்றார்.

ஆனால், இவ்விளையாட்டு தொழில்முறையாக மாறுவதற்கான அவரது பயணம் எளிதானது அல்ல; ஏனெனில் அவர் காயங்களுக்கு உள்ளானபோது விளையாட்டு அவரது பெற்றோருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து கண்டோலா வகுப்புகளைத் தவறவிட்டதால் அவரது படிப்பு தடைப்பட்டது.

  • "நான் விளையாட்டைத் தொடங்கும்போது காயமடைந்தேன், என் குடும்பத்தினர் என்னைப் பற்றி கவலைப்பட்டார்கள், எதிர்காலத்தில் நீ என்ன செய்யப்போகிறாய் என்று கேட்கிறார்கள். ஒரு நாள் விளையாட்டாக விளையாடிய பிறகு என்னால் சில நேரங்களில் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. இவை அனைத்தும் கவலையின் விளைவாகும்"

அவர் விளையாடத் தொடங்கிய தனது ஆரம்ப நாள்களை விவரிக்கும்போது இவ்வாறு கூறினார்.

காயம் தனக்குக் கனவுகளைக் கொடுத்ததாகவும், ஆனால் அது ஒவ்வொரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையின் ஒரு பகுதி என்றும் கூறினார்.

புரோ கபடி விளையாட்டின் சாயலையே மாற்றிவிட்டதாக அவர் நம்புகிறார். மேலும், நாடு ஏன் விளையாட்டின் மீது காதல் கொண்டுள்ளது என்பது பற்றியும் ஈடிவி பாரத்துடன் விவாதித்தார்.

நாம் எழுப்பி கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு:

கபடியை எப்படி, எப்போது ஆரம்பித்தீர்கள்?

  • சிறுவயதிலfருந்தே கபடி விளையாடிவருகிறேன். எங்கள் கிராமத்தில் விளையாட்டின் மீது எங்களுக்கு அதிக மோகம் உள்ளது. நான் 7ஆம் வகுப்பு படிக்கும்போது சிறுவயதில் விளையாட ஆரம்பித்தேன், பின்னர் அது ஆக்ரோசமாக மாறியது.

வேறு ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்திருக்கக்கூடிய நீங்கள் ஏன் கபடிக்குப் போனீர்கள்?

  • எங்கள் கிராமத்தின் விளையாட்டு கபடி மட்டுமே. எல்லா குழந்தைகளும் விளையாடுவார்கள். நான் அவர்களின் வழிகளைப் பின்பற்றி விளையாட்டை ரசிக்க ஆரம்பித்தேன்.

விளையாட்டைத் தொடரும்போது நீங்கள் எந்த மாதிரியான தடைகளை எதிர்கொண்டீர்கள்?

  • விளையாட்டைத் தொடங்கும்போது நான் காயம் அடைந்தேன், என் குடும்பத்தினர் என்னைப் பற்றி கவலைப்படுகிறார்கள், எதிர்காலத்தில் நீ என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டார்கள். ஒரு நாள் களைப்பாக விளையாடிய பிறகு சில நேரங்களில் என்னால் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. இதெல்லாம் கவலையாக இருந்துவந்தது. பெரிய காயம் ஏற்பட்டால் விளையாட்டில் மீண்டும் தொடர முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் பதற்றம் அடைவது வழக்கம். ஆனால் இந்தத் தடைகள் அனைத்தும் ஒவ்வொரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையிலும் வரும்; இது ஒன்றும் புதிதல்ல.

ஊரடங்கின்போது நீங்கள் என்னென்ன பிரச்சினைகளை எதிர்கொண்டீர்கள், எப்படி பயிற்சி செய்தீர்கள்?

  • ஆம், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளது, மேலும் எனது உடற்தகுதியைப் பராமரிப்பதில் நான் அக்கறை கொண்டிருந்தேன். நிறைய ரன்னிங் செய்வேன், வயல்களில் பயிற்சி செய்வேன், ஜிம்மிற்கு சென்றேன். ஆனால் மைதான பயிற்சி முற்றிலும் நிறுத்தப்பட்டது. பயிற்சி இல்லாததால் கடினமாகிவிட்டது. ஆனால் நிலைமை நமது கட்டுப்பாட்டில் இல்லை, எனவே எனது ஒரே கவனம் அந்த நேரத்தில் உடற்தகுதியைச் சரியாக வைத்துக்கொள்வதுதான்.

புரோ கபடி லீக் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் விளையாட்டில் என்ன மாற்றங்களை நீங்கள் காண்கிறீர்கள்?

  • புரோ கபடி தொடங்கியதிலிருந்து ஆட்டம் முற்றிலும் மாறிவிட்டது. இதற்கு முன் யாரும் எங்களை அடையாளம் காண மாட்டார்கள், ஆனால் இப்போது நாம் யார் என்று மக்களுக்குத் தெரியும். அவர்கள் இப்போது நம் பெயர்களால் நம்மை அறிந்திருக்கிறார்கள். இது அனைத்து வீரர்களுக்கும் மிகவும் நல்லது.

கபடி இப்போது இந்தியாவில் இரண்டாவது பிரபலமான விளையாட்டு? இந்த முன்னேற்றம் எப்படி ஏற்பட்டது என்று நினைக்கிறீர்கள்?

  • இந்த விளையாட்டு குறுகியது, 40 நிமிடங்கள்தான். இது மண்ணோ இயைந்தது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் விளையாடியிருக்கிறார்கள். அவர்கள் அதனுடன் இணைந்திருப்பதாக உணர்கிறார்கள், அதனால்தான் அவர்கள் அதை விரும்புகிறார்கள்.

ஹரியானா ஸ்டீலர்ஸுடனான உங்கள் அனுபவம் இதுவரை எப்படி இருந்தது?

  • நான் ஐந்தாவது சீசன் முதல் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியில் இருக்கிறேன். பயிற்சியாளர்கள், நிர்வாகம் உள்பட அனைவரும் நல்லவர்கள். சிறப்பாகச் செயல்பட்டு அணி கோப்பையை வெல்வதே எங்களது ஒரே நோக்கம்.

இந்த சீசனில் நீங்கள் எப்படி முன்னிலை வகித்தீர்கள்?

  • இது எனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பு. அணிக்கு கேப்டனாக எனக்கு எந்த அழுத்தமும் இல்லை.

இதையும் படிங்க: பங்குச்சந்தையில் ஆட்டம் காட்டிய கரடி!

ABOUT THE AUTHOR

...view details