தமிழ்நாடு

tamil nadu

எனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தேசிய முகாமிலிருந்து வெளியேறுவேன்: அமித் பங்கல்

By

Published : Nov 4, 2020, 6:15 PM IST

எனது கோரிக்கைகளை இந்திய விளையாட்டு ஆணையமும், இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பும் நிறைவேற்றவிட்டால் தேசிய முகாமிலிருந்து வெளியேறுவேன் என குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல் தெரிவித்துள்ளார்.

exclusive-boxer-panghal-threatens-to-pull-out-of-national-camp
exclusive-boxer-panghal-threatens-to-pull-out-of-national-camp

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஒலிம்பிக் தொடரில் 52 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கப்பதக்கம் வெல்வார் என இந்தியாவுக்கு நம்பிக்கையளிப்பவர் அமித் பங்கல். இவர் தனக்கென்று தனி பயிற்சியாளர்கள், பயிற்சி செய்வதற்கான உபகரணங்கள் வழங்க வேண்டும் என இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு ஆகியவற்றிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இதற்கு அவர்களிடமிருந்து இதுவரை எவ்வித பதிலும் வரவில்லை. இதைப்பற்றி ஈடிவி பாரத் செய்திகளுக்காக பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.

அதில், ''நான் இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு ஆகியவற்றிற்கு கடிதம் அனுப்பியுள்ளேன். கடந்த வருடம் டிசம்பர் மாதமே கடிதம் அனுப்பினேன். பலமுறை அனுப்பியிருக்கிறேன். ஆனால் இதுவரை எனக்கு தனியாக ஏன் பயிற்சியாளர் நியமிக்கப்படவில்லை என தெரியாமலே உள்ளது. என்னிடம் அவர்கள் அரசியல் செய்ய வேண்டாம் என நினைக்கிறேன். அப்படி செய்தால், தேசிய முகாமிலிருந்து நிச்சயம் வெளியேறிவிடுவேன்.

இவர்களின் முடிவு எனது டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பயிற்சியை கடினமாக்கியுள்ளது. நான் விளையாட்டு வீரனாக பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளேன். ஆனாலும் அவர்கள் என்னோடு அரசியல் செய்கிறார்கள். குத்துச்சண்டை பயிற்சியை இன்னொருவர் இல்லாமல் செய்ய முடியாது.

அதேபோல் உடற்பயிற்சி உபகரணங்கள் இல்லாமல் ஃபிட்னெஸ் உடன் இருக்க எப்படி முடியும். பலமுறை அவர்களின் கோரிக்கை விடுத்துவிட்டேன். நான் மீண்டும் இந்தியா வரும்போது மீண்டும் அவர்களுக்கு கோரிக்கை வைப்பேன். ஒருவேளை அவர்கள் எனக்கென்று பிரத்யேக பயிற்சியாளர்களை நியமிக்கவில்லை என்றால், நிச்சயம் தேசிய முகாமிலிருந்து வெளியேறிவிடுவேன்.

தற்போது இத்தாலியில் இருக்கிறேன். இந்தியாவைச் சேர்ந்த 15 பேருடன் ஐரோப்பாவில் நடக்கும் முகாமில் பங்கேற்றுள்ளோம். இன்னும் அதிகமாக பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். இங்கு வந்த புதிதில் ஒருவருடன் பயிற்சி மேற்கொண்டேன். ஆனால் அதன்பின்னர் கரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகமானதால் மற்றவர்களுடன் பயிற்சி செய்ய முடியவில்லை'' என்றார்.

இதனைத்தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக இந்திய குத்துச்சண்டை ஆணையத்தை தொடர்புகொண்டு பேசியபோது, பதிலளிக்க மறுத்தனர்.

இதையும் படிங்க:’டோக்கியோவில் பதக்கம் வெல்வதே குறிக்கோள்' - ரீனா கோகர்!

ABOUT THE AUTHOR

...view details