தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பாலியல் வழக்கு - ஒலிம்பிக் சாம்பியனுக்கு 5 ஆண்டுகள் சிறை! - judo champion Peter Seisenbacher

ஒலிம்பிக்கில் ஜூடோ விளையாட்டில் இரண்டு முறை தங்கம் வென்ற ஆஸ்திரேலிய வீரர் பீட்டர் சீசன்பேச்சர் சிறுமிகளை பாலியல் வண்புர்வு செய்த குற்றத்திற்காக,  ஆஸ்திரிய நீதிமன்றம் அவருக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து  உத்தரவிட்டுள்ளது.

Peter Seisenbacher
Peter Seisenbacher

By

Published : Dec 3, 2019, 4:19 PM IST

ஆஸ்திரியாவைச் சேர்ந்த பீட்டர் சீசன்பேச்சர் (59), கடந்த 1984, 1988 ஒலிம்பிக் போட்டியில் ஜூடோ பிரிவில் தனது நாட்டிற்காகத் தொடர்ந்து இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார். 1989இல் ஓய்வு பெற்றபின், இளம் வீரர்களை ஊக்குவிக்கும் ஸ்போர்ட் லைஃப் என்ற ஆஸ்திரியாவின் நிதியுதிவித் திட்டத்திற்குத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, 1993இல் ஜூடோ விளையாட்டின் போது, ஒருவரைத் தாக்கியதால் அவர் அப்பதிவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதனிடையே, பீட்டர் சீசன்பேச்சர் 1990, 2000 காலகட்டங்களில் இவர் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அது தற்போது நிரூபணம் ஆனதால், ஆஸ்திரிய நீதிமன்றம் பீட்டர் சீசன்பேச்சருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: பழைய சிங்கங்களுக்கான உலகக்கோப்பையில் களமிறங்கும் இந்தியா

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details